ஜனாதிபதித் தேர்தல்: ரணில் பக்கம் சாய்ந்த பிரதமர் தினேஷ் குணவர்தன
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (01) மஹரகமவில் (Maharagama) உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
தளராத ஆதரவு
இந்தக் கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியின் பிரதம செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன, உப தலைவர் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பிரதி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, பிரதி செயலாளர் விஜய ரத்நாயக்க, உப தலைவரும், முன்னாள் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன உள்ளிட்ட மத்தியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிபபிடத்தக்கது.
[NJKKTAU ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |