“இம்முறையும் கறுப்பு தீபாவளி” நிலைப்பாட்டை வெளியிட்டார் ராஜாராம்
sri lanka
people
2021
dipawali
rajaram
By Vanan
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளியை, கறுப்பு தீபாவளியாக கொண்டாடுவதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ராஜாராம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார்.
தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடிகளும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.