சிறிலங்காவின் இராஜதந்திர நோக்கம் - வெளிவிவகார அமைச்சின் அதிரடி நடவடிக்கை
இராஜதந்திர நோக்கங்களுக்காக ஈராக், ருமேனியா, சைபிரஸ் போன்ற நாடுகளில் இலங்கை தூதரகங்கள் விரைவில் ஸ்தாபிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர், அதிபர் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இம்மூன்று நாடுகளிலும் இலங்கை தூதரகங்களை நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் இவர் கருத்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் சைப்ரஸ் மற்றும் ஈராக்கில் இயங்கி வந்த இலங்கை தூதரகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.
அதிகளவிலான இலங்கையர்கள்
இந்நிலையில் அதிகளவிலான இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளாக இவை காணப்படுவதனால், அவர்களை பராமரிக்க தூதரகங்கள் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இந்த தூதரகங்களை அமைப்பதற்கு ஆரம்பத்தில் நிறைய பணம் செலவாகும். எவ்வாறாயினும் பொருளாதார நெருக்கடி நிலவக்கூடிய காலப்பகுதியில் இப்பாரிய தொகையை கண்டுபிடிப்பது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
