அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரன் எம்.பி வேண்டுகோள்

Anura Dissanayake S. Sritharan
By Dharu Sep 20, 2026 02:00 AM GMT
Report

பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில்அனோஜனின் குடும்பமும் ஒன்றாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் சிவராசா தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய விசேட கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து கடிதத்தில் பின்வரும் விடயங்களை சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு

அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு

 அனோஜனின் குடும்பப் பின்னணி

“இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரன் எம்.பி வேண்டுகோள் | Diplomatic Pressure Is Essential The Anon Affair

அந்த உயரிய அறவிழுமியங்களின் அடிப்படையில் அனோஜனின் குடும்பப் பின்னணி, வயது, சமூக மற்றும் பொருளாதாரச்சூழல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவ்விடயத்துக்கு சாதகமான தீர்வொன்றை வழங்குவதற்கான இராஜதந்திர ரீதியான அழுத்தங்களை வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசா தொழில் வாய்ப்புக்காக சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கு வசித்துவந்த நிலையில், நபிகள் நாயகம் தொடர்பாக சமூக ஊடகத்தில் தவறான பதிவு ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இதுகுறித்து சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவருக்கு கடந்த மாதம் 3 ஆம் திகதி கடிதமொன்றையும் அனுப்பியிருந்தேன்.

குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு அனோஜன் சவுதி அரேபியாவில் டைனமிக் அன்ட் எக்ஸலன்ஸ் அரேபியா கம்பனி என்ற நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் சஹ்ரானின் சகோதரருடன் ஒரு தேநீர் சந்திப்பு

குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரம்

சவுதி அரேபியா தனது மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட ஆட்சியை மிக உயர்ந்த முறையில் பேணிவரும் ஒரு நாடாகும் என்பதை நான் முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அனோஜன் விவகாரத்தில் இராஜதந்திர அழுத்தம் அவசியம்! ஜனாதிபதியிடம் சிறீதரன் எம்.பி வேண்டுகோள் | Diplomatic Pressure Is Essential The Anon Affair

ஒவ்வொரு நாட்டுக்கும் தனது சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இறைமையுரிமை இருப்பதையும் மதிக்கிறேன்.

அனோஜன் சிவராசா குற்ற நோக்கத்துடன் சவுதி அரேபியாவுக்குச் செல்லவில்லை. அவரது தந்தை சிவராசா மற்றும் தாய் யோகேஸ்வரி ஆகியோரின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் பகிர்ந்து, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு வேலைவாய்ப்பை அணுகியுள்ளார்.

அவரது உழைப்பே குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தின் பிரதான ஆதாரமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை அவரை மாத்திரமன்றி, அவரைச் சார்ந்த முழுக்குடும்பத்தின் வாழ்வையும் முற்றாக முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

அன்றாட வாழ்க்கைச் செலவுகளையே மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தின் எதிர்கால வாழ்வை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைக்கும் விளைவையே இது ஏற்படுத்தும்.

இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி