இலங்கையின் எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள சர்வதேச அரசியல் மாற்றங்கள்

LAUGFS Gas PLC Litro Gas Price
By Dharu Oct 29, 2026 07:03 AM GMT
Report

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்க்கால சூழல் மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள், இலங்கையின் உள்நாட்டு எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு விநியோகத் தட்டுப்பாடுகளுக்கு உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடங்கல்களே பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான தீவிரமடைந்து வரும் இராணுவப் பதற்றம் மற்றும் செங்கடல்  பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து மீதான அச்சுறுத்தல்கள் காரணமாக, சர்வதேச கடல் வழியூடான வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ரகித ராஜபக்சவின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை:தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்

ரகித ராஜபக்சவின் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை:தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்

தரையிறக்குவதில் தாமதங்கள்

இதன் நேரடி விளைவாக, இலங்கைக்கு எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல்கள் நாட்டிற்குள் வருகை தருவதில் மற்றும் அவற்றை தரையிறக்குவதில் பல நாட்கள் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையின் எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள சர்வதேச அரசியல் மாற்றங்கள் | Direct Impacts On The Energy Market

உள்நாட்டு சந்தையில் சுமார் 20 சதவீத பங்கைக் கொண்டுள்ள உள்நாட்டு நிறுவனமான லாஃப்ஸ் கேஸ் விநியோகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடுமையான சிக்கல்கள் நிலவி வருகின்றன.

இதனால், 80 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள அரசுக்குச் சொந்தமான லிட்ரோ  நிறுவனத்திற்கான தேவை திடீரென நாளொன்றுக்கு 1,100 மெட்ரிக் தொன்னிலிருந்து 1,600 மெட்ரிக் தொன் வரை அதிகரித்துள்ளது.

இந்தத் திடீர் கேள்வி அதிகரிப்பு மற்றும் கப்பல் வருகைத் தாமதம் காரணமாக சந்தையில் தற்காலிகமாக 2.5 இலட்சம் முதல் 3 இலட்சம் சிலிண்டர்கள் வரை தட்டுப்பாடு நிலவியது.

எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வழிகாட்டலில் விசேட கண்காணிப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய லிட்ரோ நிறுவனம் தனது தினசரி விநியோகத்தை 74,000 சிலிண்டர்களில் இருந்து 1 இலட்சம் சிலிண்டர்கள் வரை உயர்த்தியுள்ளது.

ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்!

ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்த இலங்கையர் : குற்றமற்றவர் என விடுவித்த மாலைதீவு நீதிமன்றம்!

விநியோகிக்க நடவடிக்கை

சமீபத்தில் 3,000 மெட்ரிக் தொன் மற்றும் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய 'FRANCOIS' மற்றும் 'GOODWILL' ஆகிய கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதோடு, ஒக்டோபர் 27 ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் 7 இலட்சம் சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிசக்தி சந்தையில் நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள சர்வதேச அரசியல் மாற்றங்கள் | Direct Impacts On The Energy Market

அடுத்த சில தினங்களில் சந்தை வழமைக்குத் திரும்பும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

இஸ்ரேலில் தற்காலிக பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு நீடிப்பதும், அங்கு உருவாகும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

இது கச்சா எண்ணெய் விநியோகத்தில் தொடர் தடையை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, உள்நாட்டு எரிபொருள் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா மீதான தடைகளுக்கு மத்தியிலும் மறைமுகமான சர்வதேச எண்ணெய் உடன்படிக்கைகள் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வீழ்ச்சியடையச் செய்ய டொனால்ட் ட்ரம்பின் ஆதரவுத் தரப்பு முயல்வதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தற்காலிகமாக குறைந்தாலும், போர்க்கால சூழலால் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்படும் தாமதங்கள் இலங்கையைப் போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளுக்குத் தொடர்ந்தும் சவாலாகவே இருக்கும்.

எனினும், உள்நாட்டு விநியோக கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், அவசர இருப்புகளைப் பேணுவதன் மூலமும் இந்த எரிசக்தி நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் தற்போது தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018