இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் திடீர் மரணம்: திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி
புதிய இணைப்பு
இந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜின் (Manoj Bharathiraja ) இறுதி சடங்குகள் இடம்பெற்று வருகின்றது.
நடிகர் மனோஜ் மாரடைப்பு காரணமாக நேற்று(25) உயிரிழந்திருந்தார்.
தற்போது மனோஜின் உடல் இறுதி அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முதலாம் இணைப்பு
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (Manoj Bharathiraja )மாரடைப்பு காரணமாக காலமானார்.
உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த மனோஜ் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 48 ஆகும்.
மாரடைப்பு
பாரதிராஜ் இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சாதுரியன், மகா நடிகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சரத்குமார், முரளி ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த சமுத்திரம் திரைப்படம் மற்றும் சத்யராஜுடன் இணைந்து நடித்த மகா நடிகன், வருசமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது.
சமீபத்தில் இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 20 மணி நேரம் முன்
