மட்டக்களப்பில் நிகழ்ந்த அனர்த்தம் - 30 மாடுகள் உயிரிழப்பு (படங்கள்)
Ampara
Batticaloa
Sri Lankan Peoples
By Sumithiran
30 மாடுகள் உயிரிழப்பு
மட்டக்களப்பு – வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் உயிரிழந்துள்ளன.
மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில் மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகளே இவ்வாறு நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தன.
இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகள்
இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் அன்றாடம் தொழிலுக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதன் காரணமாக பல இலட்சம் ரூபா நஸ்டம் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி