வவுனியாவில் இன்றுமாலை இடம்பெற்ற அனர்த்தம் - சிறுவர்கள் உட்பட நால்வருக்கு ஏற்பட்ட நிலை
vavuniya
people
injuerd
By Sumithiran
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் நான்குபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றுமாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
பெரியகுளம் பகுதியில் இன்றுமாலை இலேசான மழை பொழிந்தநிலையில் வீட்டின் அருகில் நின்றிருந்த பாலைமரம் முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
இதன்போது வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் தாயார் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி