மட்டக்களப்பில் நள்ளிரவு வேளை நிகழ்ந்த அனர்த்தம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட,செட்டிபாளையத்தில் நள்ளிரவு வேளையில் மதிலை உடைத்துக்கொண்டு வளவொன்றினுள் சிறிய ரக பாரவூர்தி உட் சென்றுள்ளது. இச்சம்பவம் சனிக்கிழமை இரவு (15.11.2028) இடம் பெற்றுள்ளது
மட்டு கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக பாரவூர்தி செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்துள்ளது. அப்பிரதேசத்தில் மழையுடனான வானிலை நிலவி வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
வெதுப்பகத்திற்கு சொந்தமான வாகனம்
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான விபத்துக்குள்ளான குறித்த வாகனத்தில் விபத்து சம்பவித்த சமயம் மருதமுனையைச் சேர்ந்த இருவர் பயணித்துள்ளதுடன் தெய்வாதீனமாக அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, என்பதுடன் வீட்டு மதிலும் வீட்டின் சில உடமைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் பாரவூர்தியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

