விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிப்பு
Sri Lanka Police
Batticaloa
Sri Lankan Peoples
By Dhilak
போரின் போது பயன்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருந்த ஆளணி எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாறு பிரதேசத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விடுதலைப் புலிகளால் எட்டு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
அதன்படி, 299 ஆளணி எதிர்ப்பு கண்ணிவெடிகள், 07.62 mm × 39 டெட்டனேட்டர்கள் 38 மற்றும் 19,930 உயிர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏறாவூர் நீதவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் விசாரணைக்காக கரடியனாறு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்