இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு - சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம்

Sri Lankan Tamils Dr Wijeyadasa Rajapakshe Ethnic Problem of Sri Lanka
By Vanan Dec 02, 2022 12:16 AM GMT
Report

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்தும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், பாரபட்சத்திற்கு எதிராக அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகயை மேற்கொண்டுவருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சர்வதேச மன்றமொன்றில் எடுத்துரைத்துள்ளார்.

காலனித்துவ காலத்தில் புகுத்தப்பட்ட பாகுபாடான இன, அரசியல் மற்றும் கலாசார அம்சங்கள் இன நல்லிணக்கத்தை அழிப்பதற்கு இட்டுச் சென்றதாக ஸ்ரீலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு - சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம் | Discrimination Against Tamils Sri Lanka People

மெக்சிகோவின் மெக்சிகோ நகரில் இடம்பெற்ற இனப் பாகுபாட்டிற்கு எதிரான யுனெஸ்கோ உலகளாவிய மன்றத்தின் அமர்வு கனடா மற்றும் ஃபோர்ட் அறக்கட்டளையின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, கடந்த காலங்களில் நிலவிய கொவிட்-19 மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற பல தடைகளுக்கு மத்தியில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இனம், மொழி, மதம், கலாசாரம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களிடையே சமத்துவத்தைப் பாதுகாக்க அரசாங்கம் அரசியலமைப்பு அதிகாரம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில் அத்தகைய எந்தவொரு நபருக்கும் ஏற்படும் எந்தவொரு அநீதிக்கும் தீர்வை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு தடையற்ற அதிகாரம் உள்ளது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

செல்வந்த நாடுகள் முன்மாதிரி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு - சர்வதேச மன்றமொன்றில் பகிரங்கப்பட்ட விடயம் | Discrimination Against Tamils Sri Lanka People

அரச சேவையின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் அதன் மூலம் பாகுபாடுகளை தவிர்ப்பதற்கும் ஏற்பாடுகளை செய்யும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை இலங்கை அண்மையில் நிறைவேற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

பாகுபாட்டைக் களைவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்று திரள வேண்டும் என அழைப்பு விடுத்த நீதி அமைச்சர், மேலும் செல்வந்த நாடுகள் முன்மாதிரியாக இருப்பதன் மூலம் துடிப்பான பங்களிப்பை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காலனித்துவ ஆட்சியின் விளைவாக மிகப் பெரிய நிறுவனங்கள் ஏழை நாடுகளில் குழந்தைகளை சுரண்டியுள்ளதுடன், பிராந்தியங்களில் பாகுபாடு வேரூன்றியதாகவும் பல நாடுகளின் பிரதிநிதிகளால் இந்த மன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி