லக்ஷ்மன் யப்பாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஒரு தொழிலதிபரிடமிருந்து 1 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை முதலீட்டு சபை (BOI) தொடர்பான ஒரு காரியத்திற்கு வசதி செய்து கொடுப்பதற்காக, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அந்தப் பணம் 2013-ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் குற்றசாட்டு
இதன் அடிப்படையில், ஆணையம் நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள், இலஞ்ச உழல் சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேல் நீதிமன்றம் இவ்விவகாரத்தை உரிய நேரத்தில் விசாரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 2 மணி நேரம் முன்