சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட மனிதர்கள் - இந்தியர் ஒருவரும் பலி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஐந்து மற்றும் ஆறாம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தனர்.
கைதிகள் பாதுகாப்பு
வன்முறைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்புக் கருதி நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இந்திய பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக 'த ஹிந்து' (The Hindu) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் வௌியாடாத போதிலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியாவினால் அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.
அவ்வாறான அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக 'த ஹிந்து' குறிப்பிட்டுள்ளது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |