ரணில் : பசில் சந்திப்பு : கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன..!
அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரை அறிவிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இன்று (24) இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச விவகாரம்
இந்த சந்திப்பின்போது அதிபர் தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற ரீதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை பொறுப்பேற்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் கட்சி ரீதியாக ஏற்கனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ச ரணிலுக்கு தெரிவித்தார்.
ரணில் அளித்த உறுதிமொழி
விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமாயின் அதனை அதிபரே செய்ய வேண்டும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.
முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்திப் பணிகளுக்கு பங்களிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு பசில் ராஜபக்ச அதிபரிடம் கோரியதாகவும் அதற்கு சாதகமாக பதிலளித்த ரணில் ,மாவட்ட குழு அமைப்பு மூலம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |