அநுர அரசின் தீர்வுத் திட்ட முயற்சிகள் : மருதமுனையில் நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வு
ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் (Ampara) கருத்தாடல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும் அமைப்பின் தலைவருமான நெளபல் தலைமையில் மருதமுனை கலாசார மண்டபத்தில் இன்று (08) நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.
மேற்படி செயலமர்வில் தற்போதைய அரசாங்கத்தின் தீர்வுத் திட்ட முயற்சிகள், முஸ்லிம்களின் அரசியல் தீர்வு முயற்சி, முஸ்லிம் கட்சிகளின் வறுமை, கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரிக்கப்பட்ட விதங்கள், கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் யூ.எல்.எம்.என் முபீன் உரையாற்றினார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
அத்துடன் மீண்டும் பேசு பொருளாகியுள்ள முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் ஆய்வாளர் ஜெஸ்மி மூஸா முக்கியத்துவம் மிக்க உரை ஒன்றை ஆற்றினார்.
மேலும், இலங்கையில் சகல இனங்களும் செளஜன்யமாக வாழ்வது எப்படி? என்ற தலைப்பில் நிகழ்வின் ஏற்பாட்டாளர் நெளபல் விசேட உரையாற்றினார்.
நிகழ்வின் இறுதியில் கவிஞர் விஜிலி மற்றும் சமூக செயற்பாட்டாளர் சத்தார் ஆகியோர்கள் சபையோர் குறிப்புரையை வழங்கினர்.
இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அம்ஜத், சமூக நிறுவனங்களின் தலைவர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/00ab1475-3b72-4626-92aa-ec7a475c67fa/25-67a73703cb447.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)