புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவை கலைப்பு
புதுவை சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலாளர் தயாளன் தெரிவித்துள்ளார்.
15வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் 15.6.26 வரை இருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டதால் இப்போது சட்டப்பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
சட்டசபை தேர்தலில் வெற்றி
புதிய சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலமான 16 எம்.எல்.ஏக்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 என 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது.

பெரும்பான்மை பலம் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சி அமைக்க எப்போது உரிமைக் கோருகிறாரோ அப்போது ஆளுனர் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்.
15வது சட்டப்பேரவையின் தலைவராக பதவி வகித்த செல்வம் புதியதாக அமையும் அரசின் சட்டப்பேரவைத் தலைவர் அல்லது தற்காலிக பேரவைத் பேரவைத் தலைவர் பதவி ஏற்கும் வரை பதவியில் இருப்பார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரங்கசாமி, பாஜகவுடனான அமைச்சரவை பங்கீட்டு மோதல் மற்றும் அமாவாசை காரணமாக வளர்பிறை முகூர்த்த நாளில் பதவியேற்கத் திட்டமிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்