நாடளாவிய ரீதியில் களை கட்டிய தீபாவளி வியாபாரம்
தீபாவளி திருநாளை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாளையதினம் உலகம் முழுதும் உள்ள இந்து மக்களினால் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி வியாபாரம்
கடந்த வருடத்தை விட இம் முறை தீபாவளி வியாபாரம் களைகட்டியுள்ளதுடன், மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
செய்தி - கபில்
யாழ்ப்பாணம்
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது.
அந்தவகையில் நாளையதினம் கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்காக மக்கள் இன்றையதினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்வேறு விதமான பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்துள்ளது.
மேலும், புடவைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்துள்ளது.
செய்தி - கஜி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
