இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பாக தி .மு.க அரசு செயற்படும் -தமிழக அமைச்சர் உறுதிமொழி
இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசாக எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசாங்கம் செயற்படும் என மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் உறுதியளித்துள்ளார்.
எனவே ,தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் விருப்பமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அவர் கூறியதாக இந்தியாவின் முக்கிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குடியுரிமை உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் கூறியுள்ளார்.
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கான அடுக்குமாடி வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.