தேவையற்ற அச்சம் வேண்டாம் - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்
எரிபொருள் முடிந்துவிடும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
தம்மிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொது மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு வந்துள்ள இரண்டு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு கப்பல்களில் உள்ள எரிபொருள் சில நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
டீசல் ஏற்றிச் செல்லும் கப்பலும், பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பலும் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த நிலையில், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
எனினும், கப்பல்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டு, எரிபொருள் இறக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல்கள் 41,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் பெட்ரோலைக் கொண்டு வந்துள்ளன.
அடுத்த சில நாட்களில் மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
