மாம்பழ பிரியரா நீங்கள் - அப்படியென்றால் மறந்தும் இவற்றை உண்ணாதீர்
தற்போது மாம்பழ சீசன்.சந்தைகள், சந்து பொந்துகள் எல்லா இடமும் மாம்பழ வியாபாரம் களை கட்டியுள்ளது.
மக்களும் மாம்பழத்தை அதிகளவில் கொள்வனவு செய்து வருகின்றனர். இவ்வாறு வாங்கும் மாம்பழத்துடன் சேர்த்து சிலவற்றை சாப்பிடுவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அப்படி எவற்றை தவிர்க்கவேண்டும் என பார்க்கலாம்.
பாகற்காய்
மாம்பழமும் பாகற்காயும் எதிரெதிர் சுவை கொண்டவை என்பதால் ஒரே சமயத்தில் இரண்டையும் சாப்பிடக் கூடாது.
மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து குடிப்பது நல்லது
தயிர்
மாம்பழம் சூடு என்றால், தயிர் குளிர்ச்சியானது. எனவே இரண்டையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது.
மாம்பழம் சாப்பிட்ட பிறகு கார்பனேற்ற குளிர்பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகளுடன் இனிப்பான மாம்பழத்தை சேர்த்து சாப்பிடுவது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
சாலட் தயாரிக்கும்போது மாம்பழம், தர்பூசணியை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்