நட்சத்திர ஹோட்டல்களில் உணவு -அரச நிறுவன பிரதானிகளுக்கு பறந்த உத்தரவு
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Government Of Sri Lanka
By Sumithiran
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அரச நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கே அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்துவது
நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்துவது என்பது பல நிறுவனங்களில் நீண்ட காலமாக நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியை கவனத்தில் எடுத்து அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி