இலங்கையை உலுக்கிய கோர விபத்து : வெளியானது புதிய தகவல்
Nuwara Eliya
Department of Motor Vehicles
Srilanka Bus
By Sumithiran
இலங்கை மக்களை ஒருகணம் திகைப்பில் ஆழ்த்திய கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் அரச பேருந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்ள்ளானமை தொடர்பாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
இதன்படி இந்த விபத்து பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணை
எனினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி