கடலுக்கு செல்ல வேண்டாம்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
weather
weather alert
By Kanna
வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், கடற்தொழிலாளர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் கடலை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் காரணமாக அந்த கடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
அதேவேளை, மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அவ்வப்போது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.
இதேவேளை, கடற்படையினரையும் அவதானமாக இருக்குமாறும் அந்த மையம் அறிவுறுத்தியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி