மக்களின் உயிருடன் விளையாடாதீர்கள்! விரைவில் பாடம் புகட்டுவர் - எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை
மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டையே அரசாங்கம் செய்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கம்புருபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விவசாயிகள் சந்திப்பின் போதே அவர் இந்த விடத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
24 மணி நேரமும் விழிப்புடன் இருக்கும் அரசாங்கம் தான் நாட்டுக்குத்தேவை என்றும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு வினைதிறனாக செயற்படும் அரசாங்கத்தினால் மட்டுமே முடியும்.
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியானது தொடர்ச்சியான மக்கள் சேவையுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் எவ்வளவு தம்பட்டம் அடித்து பொய் சொன்னாலும், மக்களுக்கான சந்தர்ப்பம் மிக விரைவில் வரும் என்றும் இந்த அரசாங்கத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










