ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க கோரி ஆர்ப்பாட்டம்
Ministry of Education
Ceylon Teachers Service Union
Education
Teachers
By Thulsi
கல்வி துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “பல ஆண்டுகளாக கல்வித் துறையில் சேவையாற்றியும், எங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
கோரிக்கைகள் அடங்கிய மகஜர்
எங்களது அனுபவத்தையும் தகுதியையும் கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதில் பெரும்பாலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடம் கையளித்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்