உலகில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரே நாடு இதுதான் : காரணம் தெரியுமா...
பரந்துபட்ட இந்த உலகில் மக்களை கட்டுக்குள் வாழ வழிசெய்வது அவரவர் கடைப்பிடிக்கின்ற மதங்கள், அந்த வகையில் பான் மதங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் என்பவற்றைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதில் உலகில் அதிகளவான மக்கள் பின்பற்றும் மாதமாக முதன்மை இடத்தினை கிறிஸ்தவ மதம் பிடித்திருக்க, இரண்டாவது இடத்தினை இஸ்லாம் மதம் தனதாக்கிக்கொண்டுள்ளது.
இந்த மதத்தினை பின்பற்றும் மக்களினை முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
புனித மக்கா
இவர்கள் அதிகளவில் பரந்து வாழும் பிரதேசமாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் திகழ்கிறது.
சவுதி அரேபிய நாட்டிலுள்ள புனித மக்கா இஸ்லாமியர்களின் தலைசிறந்த தலமாக காணப்படுகிறது, மக்கா செல்வதென்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
சவுதி அரேபியா தொடங்கி ஓமன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஈரான் என பல நாடுகளில் இஸ்லாமியர்கள் பரந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கிறிஸ்துவர்களின் தலைமையிடம்
இப்படி பல இடங்களில் இஸ்லாமியர்கள் பறந்து வாழ்ந்தாலும் கூட, உலகில் ஒரு இஸ்லாமியர்கள் கூட வாழாத ஒரு நாடு இருக்கிறது, அது எது என்று உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிகச்சிறிய நாடான வத்திக்கான் நகர் தான் அது, உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்கர்களின் மதகுருவான பாப்பாண்டவரும் இந்த வத்திக்கானில் வாழ்ந்து வருகிறார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமாக இந்த நாடு காணப்படுகிறது.
மிகவும் அழகான இந்த நாட்டில் நாட்டுக்கென்று சொந்த இராணுவம் இல்லை என்பது ஓர் சிறப்பம்சம்.