ரசிகர்களால் வரலாறு படைத்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி! பிரமிப்பில் ஐசிசி
ஐசிசி போட்டிகளின் வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி டிஜிட்டல் முறையில் அதிகம் பார்க்கப்பட்ட ரி20 போட்டியாக சாதனை படைத்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை 163 மில்லியன் மக்கள் டிஜிட்டல் முறையில் பார்த்ததாக இந்த ஆண்டு உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் ஒளிபரப்பு கூட்டாளியான ஜியோஸ்டார் அறிவித்துள்ளது.
அதன்படி, பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 2024 ரி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
வழமைக்கு மாறான அதிகரிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடி காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான பார்வையாளர்களின் கவனம் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

Image Credit: The Indian Express
இந்த நிலையில், கடந்த ரி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்த்த மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த முறை பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 56% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening