எவருக்கெல்லாம் இதயநோய் வரும் தெரியுமா -வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்
இதயம் சார்ந்த நோய்கள் கடந்த பத்தாண்டுகளில் மும்மடங்கு அதிகரித்துள்ளன. மிகவும் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது தான் மேலும் கவலைக்குரிய விடயம் என்பதுடன் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயமாகவும் மாறியுள்ளது.
இதயம் சார்ந்த நோய்களுக்கு மார்பக வலி , தாடையில் அல்லது பின்பக்கம் வலி, காரணம் இல்லாத களைப்பு அல்லது சோர்வு, மூச்சுத்திணறல், இருமல், மயக்கம், திடீர் கால் வீக்கம் அல்லது நீர் சேர்வது ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகளாக கருதப்படுகிறது.
இதயநோய் அதிகம் தாக்குவது யாரை
இன்றைய உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.இருந்த இடத்திலிருந்தே எல்லாவற்றையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடாரமாகி விடுகிறது.உடல் எடை அதிகமாகிறது, கூடவே மன அழுத்தமும் ஏற்படுகிறது.
குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் இரத்த அழுத்த நோய் வரலாம் என்பதால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகத்தில் 80% மரணங்கள் இதய நோய்களாலேயே ஏற்படுகிறது. ஆனால், 80% இதய நோய்களைத் தடுக்க முடியும் என்பதுதான் உண்மை.
தூக்கம் அவசியம்
இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் இதய நோய் ஏற்படுகிறது. உடல் புத்துணர்ச்சி பெற தூக்கம் அவசியம். தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம்.
இதய பாதிப்பு உள்ளவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதயம் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
