நோயாளியின் மரணத்தால் வைத்தியர் உள்ளிட்ட ஊழியர்களை அடைத்து வைத்த குழு!
களுத்துறை - நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளியின் மரணத்தைத் தொடர்ந்து, நோயாளியின் உறவினர்கள் குழு ஒன்று, வைத்தியர் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் குழுவைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நேயாளி அரை ஒன்றில் குறித்த தரப்பினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
ஐந்து பேர் கொண்ட குழு
களுத்துறை வடக்கைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கடந்த 18 ஆம் திகதி இரவு மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் பிறகு உறவினர்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு கடந்த 19 ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மருத்துவமனையின் 16 ஆம் அரைக்கு வலுக்கட்டாயமாக நுழைந்து அமளி துமளியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வைத்தியர் ஒருவர், இரண்டு ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் மற்றும் ஒரு உதவியாளரை அவர்கள் தடுத்து வைத்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடுமையான அச்சுறுத்தல்
இதன்போது , ஊழியர்கள் அரையை விட்டு வெளியேறவோ, தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவோ அனுமதிக்காமல் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இறந்த நோயாளியை கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக நோயாளர் காவு வண்டியை கோரிய சம்பவம் தொடர்பாக முந்தைய நாள் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு பாதிக்கப்பட்ட வைத்தியர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
