வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

Hospitals in Sri Lanka
By Kathirpriya Aug 19, 2023 09:25 AM GMT
Report

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

வைத்தியர்களும் தாதியர்களும்

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள் | Doctors And Nurse Leaving From Country Hospitals

இவர்களில் வெளிநாட்டுக்கு உயர் கல்விக்காக சென்று நாடு திரும்பாதவர்களும் அடங்குகின்றனர்.

வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம்.

அதுமாத்திரமல்லாமல் அண்மைக்காலங்களில் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பிக்கப்பட வேண்டிய தாதிய பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.

இந்த வருடம் (2023) தாதிய கல்லூரியில் படித்து வெளியேறுபவர்கள் இருந்தாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தாதிய பயிற்சிகள் இடம்பெறாத நிலை உருவாகியுள்ளது.

 தாதியாருக்கு நல்ல வரவேற்பு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள் | Doctors And Nurse Leaving From Country Hospitals

அத்துடன் வெளிநாடுகளில் தாதியாருக்கு நல்ல வரவேற்பு இருப்பதனால் அவர்கள் வேலையை முடிவுறுத்தி வெளியேறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே எதிர்வரும் காலம் சவாலை எதிர்கொள்ளும் காலமாக அமையும்.

அத்துடன் நாடு முழுவதும் மருந்துத் தட்டப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும் 90 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் அந்தந்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு ஒரு நாளைக்கு 40 பேருக்கு செய்யப்படுகின்றது.

மருந்து தட்டுப்பாடு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள் | Doctors And Nurse Leaving From Country Hospitals

இதனை செய்வதற்கான திரவத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தற்போது அது தேவையான அளவு உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மருந்து தட்டுப்பாடு வட மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலையிலும் ஏற்பட்டிருந்தது.

இதனால் பொது மக்கள் அசௌகரியத்தினை சந்தித்திருந்தனர்.

தற்போது நிலைமை ஓரளவுக்கு சுமூகமாகி வருகின்றது. இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் நன்கொடையாளர்களிடம் மருந்துகளை பெற்று சிகிச்சையை வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் .

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021