மஹர சிறை வன்முறை திட்டமிட்ட சதி: சர்வதேச மனித உரிமை அமைப்பு அறிவிப்பு
நேற்று (01) மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்டது என்று தாம் உறுதியாக நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுபாசனா சுபாவிக்ரம, கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் (02) மஹர சிறையின் நிலவரத்தைப் பார்வையிட்ட பின்னர் அவர் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கலவரத்தின் நோக்கம் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவது
இதன் நோக்கம் அரசாங்கத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்துவதே என்ற சந்தேகம் இருப்பதாகஅவர் கூறினார்.

அதன்படி, இது ஏதோவொரு நபர் அல்லது குழுவின் திட்டத்தின்படி நடக்கும் ஒரு விஷயம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கைதிகளை தங்க வைக்க பொருத்தமான சூழல் இல்லை
இதற்கிடையில், சிறையின் நிலையை ஆய்வு செய்த பின்னர் வந்த நிர்வாக பணிப்பாளர், சிறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், கைதிகளை தங்க வைக்க பொருத்தமான சூழல் இல்லை என்றும், இதன் விளைவாக, கைதிகளை மற்ற சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்து வருவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |