ஹோர்முஸ் நீரிணை மீளத் திறப்பதில் உடன்பாடு இல்லை: ஈரான் மறுப்பு
உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையின் நிலைமை தொடர்பாக சர்வதேச அளவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறப்பது தொடர்பில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என தெஹ்ரானின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மற்றும் ஓமான் இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கட்டார் முன்வைத்த யோசனைக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்ததாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.
ஹோர்முஸ் நீரிணை
இருப்பினும் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டு்ள்ளது.
அதன்படி ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளாத எந்தவொரு கப்பலுக்கும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டே இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |