'இந்த முறை எத்தனை உயிர்கள்': மஹர சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!
சில வாரங்களுக்குள் இரண்டாவது பெரிய சிறைக் கலவரம் இடம்பெற்றுள்ள நிலையில், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், "இன்னொரு சிறைக் கலவரமா? இம்முறை எத்தனை உயிர்கள்?" எனக் கேள்வி எழுப்பிய அவர், தொடர்ச்சியாக இடம்பெறும் கலவரங்கள் சிறை அமைப்பில் ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் இருப்பதை வெளிப்படுத்கின்றது.
மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் கடும் அழுத்தத்தில் இயங்கும் சிறைச்சாலை அமைப்பே இந்த நிலைக்கு காரணம்.
நாமல் ராஜபக்ச அறிக்கை
அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல மாறாக, நிறுவன ரீதியான தோல்வியின் வெளிப்பாடாகும்.
Another prison unrest. how many lives this time?
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 1, 2026
This is the second major prison disturbance in a matter of weeks. It is no longer an isolated incident. It is the result of poor management, neglegence, and a prison system that is under immense strain.
This is no longer about…
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு இதுவரை நிரந்தர ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படாதது ஏன்?
"இந்த முக்கியமான பதவி ஏன் இன்னும் முறையாக நிரப்பப்படவில்லை?" என்று வினவிய அவர், வலுவான தலைமைத்துவம் அவசியம் என வலியுறுள்ளார்.
கூடுதல் பாதுகாப்புப் படையினரை நியமிப்பது தற்காலிகமாக பதற்றத்தை கட்டுப்படுத்த உதவலாம் என்றாலும், அதனால் அடிப்படைப் பிரச்சினைகள் தீராது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல், போதிய வசதியின்மை, தரமற்ற சுகாதார சேவைகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்களின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நீண்டகால சீர்திருத்தங்களே நிலையான தீர்வாகும் என்றும், சிறைவாசம் ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும் அவர்களின் கண்ணியத்தை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்காலிக நடவடிக்கைகளைத் தாண்டி, சிறை அமைப்பில் நிலவும் நிறுவன ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |