சவுதியின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய ஹவுத்திகள் : காணொலியும் வெளியீடு

Saudi Arabia Yemen Flight
By Jaso Sep 17, 2026 11:44 PM GMT
Report

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொளியையும் ஹவுதிகள் வெளியிட்டுள்ளனர்.

ஏமனின் மரீப் மாகாணத்தின் வான்பரப்பில், சவுதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அந்த போர் விமானம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்-வழி ஏவுகணையை பயன்படுத்தி எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளனர்.

வெளியான காணொலி

ஹவுதிகள் வெளியிட்டுள்ள சுமார் 4 நிமிட காணொளியில், வானில் விமானத்தை குறிவைத்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் இரவு நேரத்தில் தரையில் விமானத்தின் சிதைவுகள் தீப்பற்றி எரியும் காட்சிகளும், பாலைவனப் பகுதியில் கிடக்கும் கருகிய பாகங்களும் இடம்பெற்றுள்ளன.

விமானத்தில் சேத பகுதிகளில் சவுதி அரேபிய கொடியின் அடையாளம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், காணொளியில் இடம்பெறும் விமானத்தின் வகையை அதன் சேதம் காரணமாக உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பிற்கு பலத்த அடி : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள கனடா..!

ட்ரம்பிற்கு பலத்த அடி : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள கனடா..!

சவுதி உறுதிப்படுத்தவில்லை

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும், சவுதி அரேபியா இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே, சவுதி எப்-15 விமானம் உண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சவுதியின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய ஹவுத்திகள் : காணொலியும் வெளியீடு | Houthi Rebels Shot Down A Saudi Arabian F 15 Jet

இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஹவுதிகள் சவுதி பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை

லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026