இன்று காலைவரை நீடித்த மஹர சிறை கலவரம்
நேற்று (02)மாலை நான்கு மணியளவில் மஹர சிறையில் தொடங்கிய கலவரம்,இன்று அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நீடித்தது எனவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, அங்கு நிலைமை அமைதியாக உள்ளது எனவும் மேற்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
இன்று காலை (02) ஊடகங்களிடம் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர், சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் தற்போது பாதுகாப்பாக தங்கள் விடுதிகளுக்கு திரும்பிவிட்டனர் என்று கூறினார்.
மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள்
நேற்று (01) பிற்பகல் கலவரம் வெடித்தபோது, மஹர சிறையில் 4,100-க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலைமையால் கைதிகள் சிறையின் சொத்துக்களுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் கூறினார்.
ஏராளமான சொத்துக்கள் சேதம்
அடுத்த சில மணிநேரங்களில் சிறையின் பாதுகாப்பை உறுதிசெய்த பிறகு, மஹர சிறையின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவர்கள் சிறையில் இருந்த ஏராளமான சொத்துக்களைச் சேதப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சம்பவத்தின் அனுபவத்தைக் கொண்டு,பாதுகாப்புப் படையினர் அனைவரும் ஒன்றிணைந்து,எந்தவொரு பெரிய அசம்பாவிதமும் இன்றி இந்தச் சூழ்நிலையைக் கையாண்டுள்ளனர்.
அனைத்துக் கைதிகளும் பாதுகாப்பாகத் தங்களது விடுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. தற்போது நிலைமை அமைதியாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |