மருத்துவ உலகில் சாதனை -பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டி அகற்றம்
பெண்ணின் வயிற்றிலிருந்து 15 கிலோ கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் ஒருவர் மருத்துவமனையை நாடி மருத்துவர்களிடம் வயிற்று வலி குறித்து கூறியுள்ளார். வயிறு மிகவும் வீக்கத்துடன் இருந்ததால் மருத்துவர்கள் பெண்ணுக்கு ஸ்கான் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து பின்னர், கருப்பையில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர்.
வெடிக்கும் நிலையில் கட்டி

கட்டி வெடிக்கும் நிலையில் இருந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, பெண் மற்றும் அவரது வீட்டாரின் சம்மதத்துடன், சுமார் 12 மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றினர்.
அறுவைச்சிகிச்சையை அடுத்து பெண் இப்போது நலமாக உள்ளார்