நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் 5000 வைத்தியர்கள்!

Jaffna Kilinochchi Sri Lanka Hospitals in Sri Lanka
By Shadhu Shanker Sep 03, 2023 03:20 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இலங்கையில் சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 விகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற படியால் நாங்கள் சுகாதாரத்துறை சம்பந்தமான பிரச்சினைகளில் அக்கறை செலுத்துகின்றோம் மேலும் அதில் ஏற்படுகின்ற சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்கின்றோம்.

அவசர கொள்வனவு செய்யப்பட்ட 400 வகையான மருந்துகள்

அவசர கொள்வனவு செய்யப்பட்ட 400 வகையான மருந்துகள்

மருந்து தட்டுப்பாடு

srilanka doctors

அவ்வாறே இந்த மருந்து தட்டுப்பாடு சம்பந்தமாகவும், புத்திஜீவிகள் வெளியேற்றம் சம்பந்தமாகவும், முக்கியமாக வைத்தியர்களுடைய வெளியேற்றம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கத்துக்கும் எங்களுடைய முன்மொழிவுகளை வழங்கி இருந்தோம்.

ஆனால் அது உத்தியோகபூர்வமான கூட்டங்களில் பரிசிலிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் எந்தவிதமான முன்னேற்றமும் வெளிப்படவில்லை, முதலாவதாக மருந்து மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டினை உற்று நோக்கினால், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்நிலை தொடர்கிறது.

அதுமட்டுமில்லாமல் தற்போது மருந்தின் தரம் இன்மை தன்மையும் ஆங்காங்கே  இருப்பதாக கருத்துக்கள் நிலவி வருகின்றது.

பொருளாதார நிலமையும், அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவினமும், மற்றும் எதிர்கால சந்ததியினரது ஸ்த்திரத்தன்மை என்பதும் இதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது.

மேலும் 5000 வைத்தியர்கள்

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை

கிட்டத்தட்ட சுகாதார அமைச்சர் தெரிவித்ததின்படி 850 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள் மேலும் ஐயாயிரம் வரையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முயற்சிகளில் இருக்கின்ற மையும் எங்களுக்கு தெரிய வந்திருக்கின்றது.

அதேவேளை, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற போது ஒரு ஆளணி பற்றாக்குறை ஏற்பட போகிறது. இவ்வாறு ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்ற போது ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்திக்குள் சிகிச்சையை மட்டுப்படுத்த வேண்டிய நேரிடும்.

இவ்வாறு மட்டுப்படுத்துவதினால் சேவையை நாடிவரும் நோயாளிகள் அனைவருக்கும் சேவையினை வழங்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

இதனால் நோயாளிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். இவ்வாறு குறுகிய நேரத்துக்கு நோயாளிகளை பார்வையிடுவதால் தரமான சிகிச்சையினை வழங்க முடியாமல் போகலாம்.

srilanka medicine

இவ்வாறான பிரச்சனைகள் எங்களுடைய பிரதேசங்களில் வெகுவாக அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் இவற்றை நாங்கள் முதலே ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கின்றோம்.

இந்த நிலை நீடிக்காமல் அரசாங்கம் விரைந்து செயல்பட்டு நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதை தடுப்பதற்குரிய வழிகளை மேற்கொண்டு எங்களுடைய வாழ்க்கைச் செலவை கொண்டு செல்லக்கூடிய வேதனை ஏற்றத்தை வழங்குவதன் மூலம் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க முடியும்.

மருந்து தட்டுப்பாடு நீக்குவதற்குரிய முன்மொழிவுகளின் ஊடாக மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து பாமர மக்களும் பயன் பெறும் வகையில்  வைத்தியர்களும் நாட்டில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025