2026 உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியீடு
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட நேர அட்டவணைப்படி குறித்த பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி நிறைவடைகின்றது.
இந்த நிலையில் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணையை உரிய முறையில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு
இதேவேளை பரீட்சை தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விபரங்களைப் பெற்றுக்கொள்ள, மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

அதன்படி ,பரீட்சார்த்திகள் தங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 1911 (உடனடி சேவை), 0112785922 / 0112784537 / 0112786616 / 0112784208 ஆகிய இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்