சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lankan Tamils Tamils Ampara
By Farook Sihan Aug 31, 2026 09:10 AM GMT
Report

சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இந்த தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளது.

கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ரவி கருணாநாயக்க பிணையில் செல்ல அனுமதி

ரவி கருணாநாயக்க பிணையில் செல்ல அனுமதி

ஆட்டிறைச்சிக் கடை

இதன்போது அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Dog Meat Sale In The Sainthamaruthu Area

குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.

மைத்திரிக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி விருது - அப்பாவி உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதல்

மைத்திரிக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி விருது - அப்பாவி உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதல்

வைத்திய அதிகாரி 

எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்தில் 40 கோடியை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்!

ஒரு வாரத்தில் 40 கோடியை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016