ஒரு வாரத்தில் 40 கோடியை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்!
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் கடந்த வாரத்தில் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மட்டும் 408 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 1,095,895 ஆகும்.
355 மில்லியனுக்கு அதிக வருமானம்
இதனிடையே, கடந்த ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 12.4 கோடி ரூபாய்க்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |