யாழில் புற்தரைக்கு தீவைத்தவர் கையும் மெய்யுமாக சிக்கினார்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Aug 31, 2026 06:11 AM GMT
Report

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்தரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின் மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்தரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தப்பியோடிய 24 வருட சிறை தண்டனைக் கைதி - தீவிர தேடுதல் நடவடிக்கை

யாழில் தப்பியோடிய 24 வருட சிறை தண்டனைக் கைதி - தீவிர தேடுதல் நடவடிக்கை

காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன், புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

யாழில் புற்தரைக்கு தீவைத்தவர் கையும் மெய்யுமாக சிக்கினார்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Man Arrested For Setting Fire To Lawn In Jaffna

புற்தரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எனினும், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...!

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...!

யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல்: காவல்துறை பிணையில் சென்றவருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல்: காவல்துறை பிணையில் சென்றவருக்கு நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016