தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா
சீனா செமிகண்டக்டர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக, 1 ரில்லியன் யுவானை (143 பில்லியன் டொலரை) ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவினை ஒரு புறம் கொரோனா தாக்கம் வந்தாலும், மறுபுறம் தனது உற்பத்தியினை யாருக்காகவும் விட்டுவிட முடியாது என்பது போல ஒவ்வொரு நடவடிக்கையாக தொடங்கியுள்ளது.
உலகின் உற்பத்தி ஆலையாக இருக்கும் சீனா, தன் இடத்தை தக்க வைத்து கொள்ள, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க தயாராகி விட்டது. அதில் ஒன்று தான் சீனாவின் 1 ட்ரில்லியன் யுவான் அறிவிப்பு
சீனா - தாய்வான்
சீனாவின் இந்த நடவடிக்கையானது சீனா - தாய்வான் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், தாய்வானை சார்ந்திருப்பதை குறைக்கும் விதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மற்றொரு காரணம் அமெரிக்கா எனலாம். இது அமெரிக்காவினை எதிர்கொள்ள சீனா எடுக்கும் முக்கிய முடிவாகவும் பார்க்கப்படுகிறது.
சீனா தாய்வான் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவு அளித்து வருகின்றது. இதற்கிடையில் சீனா செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரியளவில் தாய்வானையே சார்ந்துள்ளது. இதனால் சீனாவுக்கு எதிராக தாய்வானை பகடைக்காயாக அமெரிக்கா பயன்படுத்தலாம் என்ற அச்சமும் சீனா மத்தியில் இருந்து வருகின்றது.
அமெரிக்காவின் பார்வை
அதோடு சீனாவின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா முடக்கும் விதமாக ஒவ்வொரு முட்டுக்கட்டையாக போட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பார்வை தற்போது செமிகண்டக்டர் பக்கம் திரும்பியுள்ளது.
இதற்கிடையில் தான் சீனா இப்படியொரு மாபெரும் நிதியினை செமிகண்டக்டர் ஊக்குவிப்புக்காக ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நிதியானது அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப்படலாம் என்றும், இது தவிர வரி சலுகை என பல சலுகைகளை உற்பத்தியாளார்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்றுமதி வர்த்தகம்
நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் உற்ப்பத்தி தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கம் செலுத்தி வருகின்றது.
இதனால் சர்வதேச நாடுகள் பலவும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஏற்கனவே வாகன உற்பத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் அரசு நேரடியாக இந்த துறையில் கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு
ஏற்கனவே சீனாவின் உற்பத்தியினை கருத்தில் கொண்டு தங்களது உற்பத்தியினை அதிகரிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கட்டமைப்புகளை தொடங்கி விட்டன.
இதற்கிடையில் தான் சீனா அவசரமாக இப்படி ஒரு திட்டத்தினை கையில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. அமெரிக்காவின் வர்த்தக துறையானது கடந்த ஒக்டோபர் மாதமே ஒரு விரிவான அறிவிப்பினை வெளியிட்டது.
அதில் அமெரிக்கா அரசு சீனாவில் இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எவ்விதமான உபகரணங்களும் அளிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்க முடிவு செய்தது.இதன் காரணமாக சர்வதேச அளவில் பெரியளவில் பற்றாக்குறை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன்
இதற்கிடையில் கடந்த ஒகஸ்ட் மாதம் செமிகண்டக்டர் உற்பத்தியினை அதிகரிக்க, 53 பில்லியன் டொலர் மானியத்தினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இதில் 24 பில்லியன் டொலர் வரி சலுகையும் அடங்கும். இதேபோல இந்தியாவும் தனது பி எல் ஐ திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர் உற்பத்திக்கு வரி சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.
இப்படி பல காரணங்களுக்கு மத்தியில் தான் சீனா தற்போது ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.