வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
Anura Kumara Dissanayaka
Economy of Sri Lanka
vehicle imports sri lanka
Toyota Lanka Vehicle Prices 2025
Budget 2026
By Thulsi
2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதிக்குள் வாகன இறக்குமதிக்காக 1,333 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அநுரகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டிற்குள் இதுவரை 1363 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாகனங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்