வடக்கு, கிழக்கு விளையாட்டு தொகுதிகளுக்கு புதிய திட்டம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்திக்கு 150 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு வசதி
இதேவேளை, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் , இரண்டாம் மட்ட விளையாட்டுக் குழுக்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உயர்திறன் கொண்ட விளையாட்டு அணிகளில் பங்கேற்கும் சுமார் 4000 விளையாட்டு வீரர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக 1,163 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விளையாட்டரங்குகளை மேம்படுத்துவதற்காக இவ்வருட வரவு செலவு திட்டத்தில் 225 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாடடு கட்டிடத் தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |