உயிருக்கு போராடிய முஸ்லிம் இளைஞனை தேசிய கீதம் பாடுமாறு தாக்கிய காவல்துறை : இந்தியாவில் கொடூரம்
இந்திய தலைநகர் புதுடில்லியில் கலவரம் ஒன்றின்போது படுகாயமடைந்த முஸ்லிம் இளைஞன் உட்பட நால்வரை தேசிய கீதம் பாடுமாறு வற்புறுத்திய காவல்துறையினர் அவர்களை லத்தியால் தாக்கும் காணொளி வெளியாகி- சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவயருவதாவது,
கடந்த 2020 ஆண்டு பெப்ரவரியில் வடகிழக்கு டில்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டத்தின்போது படுகாயமடைந்த ஃபைசான் என்ற 23 வயது இஸ்லாமிய சமூக இளைஞர் உட்பட நான்கு பேரை வீதியில் கிடத்தி வைத்து தேசிய கீதம் பாடச் சொல்லி தாக்கிய காணொளியே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காணொளி மூலம் அம்பலமான கொடூரம்
சமூக வலைதளங்களில் வைரலான காணொளியில், காவல்துறையினர் லத்திகளால் அந்த இளைஞர்களைத் தாக்கி, இரத்தம் வழியும் நிலையிலும் தேசிய கீதம் மற்றும் 'வந்தே மாதரம்' பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவது பதிவாகியிருந்தது.
The Indian govt has launched a misinformation campaign claiming that every video of police & mob violence in Delhi are fake.
— Arjun Sethi (@arjunsethi81) February 26, 2020
This video is now confirmed. Delhi police in riot gear beat five people on the road, forcing them to sing the national anthem.https://t.co/SgC8ZmtGCi
இதன்பின் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இளைஞர் ஃபைசான் உயிரிழந்தார்.
நீதிமன்றின் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம், ஃபைசான் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் எனக் கருதப்படும் 7 காவலர்கள் நேரில் முன்னிலையாக ஆணை அனுப்பியுள்ளது.

அவர்கள் மீது கடத்தல், முறையற்ற சிறைபிடிப்பு மற்றும் கொலைக் குற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 6 மணி நேரம் முன்