அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 16 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 37 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும்,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 60 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 446 ரூபா 10 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 428 ரூபா 61 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 376 ரூபா 57 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 361 ரூபா 54 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.