இன்றைய டொலரின் பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
டொலர்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( செப்டம்பர் 06 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 369.02 ரூபாவாகவும், கொள்வனவு விலை 358.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது,
அதே நேரத்தில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 369.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 353.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 429.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 412.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.