டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம்! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (01) நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலையில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 356 ரூபா 42 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 367 ரூபா 24 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று 355 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 447 ரூபா 06 சதமாகவும் அதேசமயம் பிரித்தானிய பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 429 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 385 ரூபா 40 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 370 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.