பிரித்தானியாவில் வாழும் இலங்கையருக்கு நேர்ந்த நிலை - பறிபோன 100000 அமெரிக்க டொலர்கள்
பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் டுபாயில் வாழும் இலங்கையரின் வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் டுபாய் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு வாகன இறக்குமதி செய்யும் வியாபாரத்தை குறித்த இலங்கையர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். டுபாயில் உள்ள இலங்கையருடன் இணைந்து டுபாயில் இருந்து பிரித்தானியாவிற்கு வாகனங்களை இறக்குமதி செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் டுபாயில் உள்ள நண்பர் மீதான நம்பிக்கையில் வாகனங்கள் வழங்கப்படுவதற்கு முன்பே சம்பிக்க டி சில்வா பணத்தை அனுப்பியுள்ளார். அவரது டுபாய் நண்பர் பணத்துடன் காணாமல் போனதாகவும் டுபாயில் உள்ள சட்டத்தரணி ஊடாக சம்பிக்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தலைமறைவு
டுபாயில் வசிக்கும் ஸ்டீவ் ரொபர்ட் என்ற இலங்கையரிடம் 100,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி சில வாகனங்களை டுபாயில் இருந்து கொள்வனவு செய்து பிரித்தானியாவில் இறக்குமதி செய்ய சம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
குறித்த மோசடியாளரான டுபாய் வாழ் இலங்கையரின் கோரிக்கையின் பேரில் அவரது மனைவியின் கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் டுபாய் நண்பரும், அவரது மனைவியும் தலைமறைவாகியுள்ளனர்.
டுபாய் நீதிமன்றத்தில் வழக்கு
டுபாய் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த பின்னர், பிரித்தானியா வாழ் இலங்கையரான சம்பிக்கவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு 100,000 அமெரிக்க டொலர்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், அவர் இதுவரை பதிலளிக்காத நிலையில், சம்மனை ஏற்காமல் தலைமறைவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
