ஆறு மாத காலத்தில் ரூபாவின் பெறுமதியில் பாரிய மாற்றம்
2023 மே 31 ஆம் திகதி வரையான ஒரு வருட காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 22.9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதே காலப்பகுதியில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (01) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
நேற்றுடன்(31) ஒப்பிடுகையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
மக்கள் வங்கி
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 286.12 முதல் ரூ. 282.22 ஆகவும் விற்பனை பெறுமதி ரூ. 301.50 முதல் ரூ. 297.40 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 285.81 முதல் ரூ. 283.07 மற்றும் ரூ. 298 முதல் ரூ. 296 ஆகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கி
சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 289 முதல் ரூ. 284 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 301 முதல் ரூ. 296. ஆகவும் குறைந்துள்ளது.
